சுடச்சுட

  

  கூவத்தூர் அருகே லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

  சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் கலீல்ரஹ்மான்(46). மினிவேன் டிரைவர். இவர், புதுச்சேரியில் நடைபெறும் கட்டடப் பணிக்கான கட்டுமானப் பொருள்களை இறக்கி வைத்துவிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவருடன் வேன் கிளீனர் வேலாயுதம் (58) என்பவரும் உடனிருந்தார். கூவத்தூரை அடுத்த கடற்கரைச் சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மீது வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கலீல்ரஹ்மான், வேலாயுதம் உயிரிழந்தனர்.

  இது குறித்து கூவத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai