சுடச்சுட

    

    வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி

    By காஞ்சிபுரம்  |   Published on : 20th July 2013 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கியில் கடனுதவி பெற்று தருவதாகக் கூறி 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காஞ்சிபுரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

     மனு விவரம்: காலூர் கிராமத்தைச் சேர்ந்த பொய்யாகுளம் அரசு சுகாதாரத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் கோவிந்தராஜ் மகன் சம்பத்தும், அவரது மனைவி சங்கீதாவும் வங்கியில் கடனுதவி பெற்று தருவதாக கூறி எங்களிடமிருந்து அவர்கள் தலா ரூ. 3, ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 5 லட்சத்துக்கு மேல் முன்பணமாக வாங்கியுள்ளனர். ஆனால்  கடன் வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தனர். மேலும் எங்கள் பெயரில் வங்கி கணக்கு துவங்கி, வங்கி புத்தகம், காசோலையை முறையாக ஒப்படைக்கவில்லை.

    இதுகுறித்து அவர்களிடம் கேட்டால் தரமுடியாது என தகாத வார்த்தையால் பேசி விரட்டுகின்றனர்.  எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai