சுடச்சுட

    

    செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகரில் அதிமுக பிரமுகர் சனிக்கிழமை இரவு மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    செங்கல்பட்டை அடுத்த பி.வி.களத்தூர் சலவையார் தெருவைச் சேர்ந்தவர் குப்பன் (57). அகில இந்திய எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றியச் செயலர்.

    இவர், சனிக்கிழமை பி.வி.களத்தூருக்கு சென்றுவிட்டு, இரவு சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

     அப்போது அவரது காரை வழிமறித்த மர்மகும்பல், குப்பனை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடியது.

    இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவலறிந்த செங்கல்பட்டு டி.எஸ்.பி. குமார் தலைமையிலான போலீஸார் அங்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

    மேலும் இதுகுறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இக்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai