அரசு நிலம் ஆக்கிரமிப்பு:ஆர்.டி.ஓ. விசாரணை
By செங்கல்பட்டு | Published on : 21st July 2013 02:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மாமல்லபுரம் பூஞ்சேரி அருகே தனியார் சிலரால் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டு கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பூஞ்சேரி கிராமத்தில் உள்ள சுமார் 60 ஏக்கர் பரப்பிலான அரசு நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து, மனையாக மாற்றி விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியினர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த புகார் குறித்து விசாரணை செய்ய செங்கல்பட்டு கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டது.
இதன்பேரில், செங்கல்பட்டு கோட்டாட்சியர் செல்லப்பா தலைமையில் முதல் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், மேய்க்கால் நிலத்தை வாங்குவதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றம். பூஞ்சேரி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்ட்டுள்ள அரசு மேய்க்கால் நிலம் மீட்கப்படும்.
மேலும் இந்நிலத்தை ஆக்கிரமித்து விற்பனை செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.