Enable Javscript for better performance
செங்கல்பட்டில் பலத்த மழை- Dinamani

சுடச்சுட

    

    செங்கல்பட்டில் வெள்ளிக்கிழமை சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    தமிழகத்தில் சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழைப் பெய்து வருகிறது.

    இந்நிலையில், செங்கல்பட்டில் வெள்ளிக்கிழமை மாலை சூறாவளிக் காற்று வீசியது. இதனைத்தொடர்ந்து, பலத்த மழை பெய்தது.

    இதனால் முக்கியச் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மேலும் பல்வேறு இடங்களில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசியது. பலத்த காற்றின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதே போல் மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர் ஆகியப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai