சுடச்சுட

    

    தேசிய நெடுஞ்சாலை தரத்தில் கிராமங்களில் சாலை வசதி

    By காஞ்சிபுரம்  |   Published on : 21st July 2013 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிராமங்களில் தேசிய நெடுஞ்சாலைக்கு இணையான சாலை வசதிகளை செய்து தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.பி. முனுசாமி உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டார். ஊரகவளர்ச்சி, மகளிர் திட்டம், புதுவாழ்வுத்திட்டம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளின் திட்டங்கள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன.

      கூட்டத்தில் அமைச்சர் பேசியது: சாலைப்பணிகளை கால நிர்ணயம் செய்து விரைந்து முடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை தரத்தில் கிராம சாலைகளை அமைத்து தர வேண்டும்.

    தமிழக முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடுகளை வரும் நவம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.

    குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு நகராட்சி, மற்றும் ஊராட்சி நிர்வாகங்களுடன் இணைந்து பொதுமக்களுக்கு குடிநீர் திட்டத்தை தடையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவர்கள், தேவையான சமையலறைக் கூடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

     இதில் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை செயலர் பி.வி. சங்கர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநர் பிரஜேந்திர நவநீத், கூடுதல் இயக்குநர் ஊரக வளர்ச்சி (பொது) மதிவாணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி. சோமசுந்தரம், வாலாஜாபாத் பா. கணேசன், மொளச்சூர் இரா. பெருமாள், கணிதா சம்பத், செய்யூர் வி. ராஜி, தண்டரை மனோகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், 5 மாவட்ட திட்ட அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai