சுடச்சுட

  

  வயதான நிர்வாகிகளால் காங்கிரஸþக்கு வளர்ச்சி இல்லை

  By காஞ்சிபுரம்  |   Published on : 21st July 2013 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காங்கிரஸில் முக்கிய பொறுப்புகளில் உள்ள வயதான நிர்வாகிகளால், கட்சிக்கு எவ்வித வளர்ச்சியும் இல்லை. அவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டால்தான் கட்சி வளரும் என்று அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.

   காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியின் முன்னாள் தலைவி மாலா முருகேசனின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில், தே.மு.தி.க. முக்கிய பிரமுகர் காஞ்சி கருணாகரன் தலைமையிலான அக்கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

  நிகழ்ச்சியில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: காங்கிரஸ் மிகவும் பாரம்பரியமிக்க கட்சி. இக்கட்சியை வளர்ப்பதற்கு ஏராளமான தலைவர்கள் அரும்பாடுபட்டனர். இப்போது சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.

  இளைஞர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், காங்கிரஸ் கட்சியில் இணைந்தது சந்தோஷமான விஷயம். காங்கிரஸ் கட்சியில் வயதான பலர் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அவர்களால் காங்கிரஸýக்கு எந்த வளர்ச்சியும் இல்லை. வயதானவர்கள் தங்களது பதவியில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். அப்போதுதான் கட்சி வளரும் என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

   இளைஞர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் தலைவர் புருஷோத்தமன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் எஸ்.டி. நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai