சுடச்சுட

  

  உத்தரமேரூர் தாலுக்கா அகரம்துôளி கிராமத்தில் சனிக்கிழமை காஞ்சி மாவட்டம் தமிழ்நாடு அரசு புதுவாழ்வு திட்டம் மற்றும் காஞ்சி மீனாட்சி மருத்துவக்கல்லுôரி மருத்துவமனை, அத்தியூர் கிராம மருத்துவ மையம் இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை

  நடத்தின.

  ஊராட்சித் தலைவர் பழனி தலைமை வகித்தார். டாக்டர். சி.சுப்பிரமணியன் வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர் நேரு முன்னிலை வகித்தார். பாலிடெக்னிக் முதல்வர் கே.ராஜா முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

  காஞ்சி மீனாட்சி மருத்துவக் கல்லுôரி மருத்துவர் குழுவினர், 572 பேருக்கு பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினர். சுருள் படம் சர்க்கரைநோய் ரத்தக்கொதிப்பு, பல் பரிசோதனை செய்தனர். கண் அறுவை சிகிச்சை செய்ய 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி நன்றி

  கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai