சுடச்சுட

    

    : செங்கல்பட்டு மேலமையூர் ஏரியில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

    செங்கல்பட்டை அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்த மணியின் மகன் சக்திவேல் (26). இவர் எலக்ட்ரீஷியனாக வேலைப் பார்த்து வந்தார்.

    இவர் சனிக்கிழமை வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மேலையூரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவலை அடுத்த போலீஸ் எஸ்.பி. விஜயகுமார், ஏ.டி.எஸ்.பி. பாஸ்கர், தாலுகா இன்ஸ்பெக்டர் மனோகரன், எஸ்.ஐ. டெல்லிபாபு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் வல்லம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.

    இவர் மீது காவல்துறையில் எந்த வழக்கும் இல்லை என்பது தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்

    கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai