சுடச்சுட

  

  செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகர் பஸ் நிலையம் அருகில் அதிமுக பிரமுகரின் காரை வழிமறித்து கொலை செய்தவர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்தார்.

  பி.வி.களத்தூர் சலவையார் தெருவைச் சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், அதிமுக பிரமுகருமான குப்பன் (57) சனிக்கிழமை இரவு அவரது காரில் சென்னைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது மர்மநபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டு இறந்தார்.

  இதில் காயம் அடைந்த கார் டிரைவர் ராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

  இது குறித்து மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

  இக்கொலை சம்மந்தமாக செங்கல்பட்டுக்கு வந்த எஸ்.பி. விஜயகுமார் கூறுகையில் "செங்கல்பட்டு நகரில் கடந்த 2012 அக்டோபர் மாதம் பாமக பிரமுகர் விஜயகுமார் கொலையில் குப்பனும் முக்கிய குற்றவாளி. எனவே பழி வாங்கும் நடவடிக்கையாக விஜயகுமாரின் தம்பி சுரேஷ் தனது கூட்டாளிகளுடன் குப்பனை கொலை செய்திருக்கலாம். மேலும் கொலையாளிகளை உறுதிபடுத்தி விட்டோம்.

  அதனால் ஏடிஎஸ்பி பாஸ்கர், மதுராந்தகம் டிஎஸ்பி ராஜேந்திரன், டிசிஆர்பி பிரிவு டிஎஸ்பி மாணிக்கவேல், செங்கல்பட்டு (பொறுப்பு) ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.க்கள் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் உள்ளனர். ஓரிரு நாள்களில் குற்றவாளிகளைப் பிடித்து விடுவோம்' என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai