சுடச்சுட

  

  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவுதினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் அவரது புகைப்படத்துக்கு அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 13-வது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

  காஞ்சிபுரம் டி.கே. நம்பி தெருவில் அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.  மன்றத்தின் நகரத் தலைவர் ஆர். திருவேங்கடம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.எஸ். சுதர்சனம் முன்னிலை வகித்தார்.

  செயற்குழு உறுப்பினர்கள் டி. தணிகாசலம், ஏ. ஜெயவேலு ஆகியோர் சிவாஜி கணேசனின் புகைப்படத்துக்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.

  முன்னாள் மாவட்டத் தலைவர் மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai