சுடச்சுட

    

    திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத் தமிழ் மாநாடு

    By காஞ்சிபுரம்,  |   Published on : 22nd July 2013 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரத்தில் திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் மாநாடு சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

    காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி, திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம், திருவையாறு ஒüவைக்கோட்ட அறிஞர் பேரவை, ஒüவை அறக்கட்டளை, வல்லம் ஆர்.ஆர். கோவிந்தராஜன் கல்வி அறக்கட்டளை ஆகியன இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் அனைத்துலக 11-வது ஆய்வு மாநாட்டை சனிக்கிழமை நடத்தியது.

    தஞ்சாவூர் தமிழ் ஐயா கல்விக்கழக மதிப்பியல் தலைவர் மருத்துவர் சு. நரேந்திரன் தலைமை வகித்தார். பச்சையப்பன் அறக்கட்டளை உறுப்பினர் சீ. சிவசுப்பிரமணியன், ஈரோடு ஒüவைக்கோட்ட அறிஞர் பேரவை தலைமை அமைச்சர் சி. குமாரசாமி முன்னிலை வகித்தனர். பச்சையப்பன் மகளிர் கல்லூரி முதல்வர் இரா. சுபலட்சுமி வரவேற்றார்.

     நிகழ்ச்சியில், திருக்கோயில்களின் திருவிழாக்களும் தமிழர் கலைகளும், வரலாறு பேசும் தமிழகத்துத் திருக்கோயில்கள், தெய்வத்தமிழ் மரபும் மாட்சியும், தமிழ் வழிபாடும் சிறு தெய்வங்களும் என்ற 4 நூல்களை சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா. தாண்டவம் வெளியிட்டார்.

    இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மலேசிய நாட்டின் முன்னாள் துணை அமைச்சர் க. குமரன் பேசியது: இந்து, சமணம், பெüத்தம் என பல்வேறு சமயங்கள் தோன்றிய இந்தியத் திருநாட்டில், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்வேறு திருத்தலங்கள் உள்ள இந்த பூமியில், இந்த மாநாடு நடைபெறுவது பொருத்தமானது.

    அறம் செய்ய விரும்பு என்று இந்த உலகிற்கே உணரச் செய்த ஒüவைக்கு விழா, தமிழ் மண்ணில் வாழ்க்கைக்கு காப்பியம் எழுதிய தொல்காப்பியனுக்கு விழா, திருமந்திரம் மூலம் உலகிற்கே மருத்துவத்தின் தத்துவங்களை கூறிய மருத்துவத்துக்கு விழா, இசை, நாட்டியம் என ஒருங்கே அமைந்த கலைக்கு விழா, பண்பாட்டின் சின்னமாக விளங்கும் பெண்மைக்கு விழா என்று ஒவ்வொன்றுக்கும் விழா எடுக்கும் பெருமை நமக்கே உரியது.

    உண்ணும் உணவில், உடுத்தும் உடையில், பேசும் பேச்சில் தமிழர்களுக்கென்று ஒரு பண்பாடு உள்ளது என்றார் அவர்.

    இக்கருத்தரங்கில் நடன நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒüவைக்கோட்ட அறக்கட்டளைத் தலைவர் கண்ணகி கலைவேந்தன் தொகுத்து நடத்தினார்.

    தமிழுக்காக போராட்டம்

    நடத்தும் அவலம்

    தமிழுக்காக போராட்டம் நடத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக கோவை காமாட்சிபுரி ஆதீனம் கவலை தெரிவித்தார்.

    காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடந்த திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் அனைத்துலக 11-வது மாநாட்டில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கசுவர அடிகளார் பேசியது:

    சுதந்திர இந்தியாவில், இன்று தமிழுக்காக போராட்டம் நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ், தமிழ் என்று மேடை தோறும் பேசுபவர்கள் ஏமாற்றி வருகின்றனர். காமராஜர், அண்ணா போன்றோரின் நினைவு இல்லங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. அதே நேரம் பாழடைந்து சுடுகாடு போல இருந்த மாணிக்கவாசகர் பிறந்த இடத்தை புதுப்பிக்க எந்த அரசும் முன்வரவில்லை.

     தமிழ்ப் பண்பாடு இன்று எங்கு இருக்கிறது என்று தேடிப்பார்க்க வேண்டிய நிலை உள்ளது என்று பேசினார் சிவலிங்கசுவர அடிகளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai