Enable Javscript for better performance
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு

    By காஞ்சிபுரம்,  |   Published on : 22nd July 2013 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் 3,800 தேர்வர்கள் பங்கேற்றனர்.

    தமிழகம் முழுவதும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,981 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக காஞ்சிபுரத்தில் 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு மையங்கள் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

    ஒவ்வொரு பகுதிகளுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு தேர்வு நேரத்துக்கு முன்பு வினாத்தாள்களை அந்தந்த மையங்களில் ஒப்படைத்தனர்.

    காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. மொத்தம் 3,981 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 188 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் 3,793 பேர் தேர்வு எழுதினர்.

    காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அதே பகுதியில் உள்ள ஆந்திரசன் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் பார்வையிட்டார்.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் வந்திருந்தனர். தேர்வர்கள் வசதிக்காக குடிநீர் வசதி உள்ளிட்டவை தேர்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai