சுடச்சுட

  

  "ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமல்படுத்துவது இந்தியாவின் கடமை'

  By காஞ்சிபுரம்  |   Published on : 22nd July 2013 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமல்படுத்துவது இந்தியாவின் கடமையாகும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம், இலங்கை இந்து மன்றங்களின் ஆலய நம்பிக்கை பொறுப்பு ஒன்றியத் தலைவர் கந்தையா நீலகண்டன் தெரிவித்தார்.

  காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் அனைத்துலக மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து வந்த அவர், "தினமணி' செய்தியாளருக்கு அளித்த சிறப்பு பேட்டி:

  இலங்கையில் வடகிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை மக்களாக இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏனைய மாகாணங்களில் பெüத்த மதத்தினரும், முஸ்லிம்கள் சில இடங்களில் பெரும்பான்மையினராகவும் வாழ்ந்து வருகின்றனர்.

  இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்களாக உள்ளனர். மேலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தமிழர்களும் உள்ளனர்.

  தமிழ் பேசுபவர்களுக்கும், சிங்களம் பேசுபவர்களுக்கும் இடையே இனவாதத்தை கிளப்பி இலங்கையில் அரசியல்வாதிகள் வாழ்ந்து வருகின்றனர்.

  பெரும்பான்மை வாக்கு வங்கிக்காக அவர்கள் இன, மத துவேசத்தில் லாபம் அடைகின்றனர். இதனால் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சிங்கள அரசியல்வாதிகள் தயங்குகின்றனர். இந்தியா உள்பட ஏனைய வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்தும் இலங்கை அரசு தமிழ்பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கொடுக்க மறுக்கிறது.

  1987-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி, அப்போது இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே ஆகியோர் செய்த சர்வதேச உடன்படிக்கைபடிதான் அரசியல் அமைப்புக்கு 13-வது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

  அதை ரத்து செய்ய சிங்கள அரசியல்வாதிகள் முயல்கின்றனர். அதைத் தடுத்து நிறுத்தும் தார்மீக பொறுப்பும், அதை இலங்கை அரசு நிறைவேற்றச் செய்வதும் இந்திய அரசின் கடமையாகும்.

  இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரின்போது யுத்த பிரதேசங்களில் பல இந்து கோயில்கள் இருந்தன. அதன் உண்மை நிலை இப்போது என்னவென்று தெரியாது. அதன் உண்மை நிலையை அறிய முடியவில்லை.

  ஏனென்றால் அங்கு எங்களை அனுமதிப்பதில்லை என்றார் கந்தையா நீலகண்டன்.

  யாழ்ப்பாணம் நல்லூர் ஆதீனம் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய அடிகளார், கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்தையா கதிர்காமநாதன் உள்பட பலர் வந்திருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai