சுடச்சுட

  

  கூடுவாஞ்சேரியில் பாஜக.வினர் மறியல்: 47 பேர் கைது

  By செங்கல்பட்டு,  |   Published on : 23rd July 2013 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாஜக மாநில பொதுச்செயலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கூடுவாஞ்சேரி பகுதியில் திங்கள்கிழமை கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 47 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

  பாஜக.வின் மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதைக்  கண்டித்து கூடுவாஞ்சேரி பகுதியில் பாஜக.வினர் துண்டுப் பிரசுரகங்கள் விநியோகித்து கடைகளை அடைக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  சாலை மறியல் போராட்டத்தில் பாஜகவின் மாவட்டச் செயலாளர் நீலகண்டன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சி.ராகவன், முன்னாள் மாநில துணைத் தலைவர் மாரி, ஒன்றியத் தலைவர் தனசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், வழக்கறிஞர் ராமசாமி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி தலைவர் நாகராஜ் உள்பட 47 பேரை  போலீஸார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai