சுடச்சுட

  

  மாவட்டக் கண்காணிப்புக்குழுக் கூட்டம்: எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு

  By காஞ்சிபுரம்  |   Published on : 23rd July 2013 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்புக்குழுக் கூட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் புறுக்கணித்தனர்.

  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக மாவட்டக் கண்காணிப்பு மற்றும் கணிப்பாய்வு குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கண்காணிப்புக்குழுத் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமை வகித்தார். துணைத் தலைவர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பி. விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்புக்குழு செயலருமான லி. சித்ரசேனன் வரவேற்றார். மாவட்ட திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

  எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு: மாவட்டக் கண்காணிப்பு மற்றும் கணிப்பாய்வு குழுவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், 13 ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள வேண்டும். ஆனால் இக்கூட்டத்தில் இவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பினர்களான பண்ருட்டி ராமச்சந்திரன் (ஆலந்தூர்) அனகை முருகேசன் (செங்கல்பட்டு) ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

  இக்கூட்டத்தில் நடந்த விவாதம்: டி.ஆர். பாலு எம்.பி. : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் நடவடிக்கைகள் குறித்த குறிப்பாணைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனவா? இத்திட்டத்தில் எத்தனை பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். அவர்களில் எத்தனை பேர் பணிக்கு வருகிறார்கள். பணிக்கு வராதவர்கள் குறித்த கணக்கு உள்ளதா?

  திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன்: மாவட்டத்தில் மொத்தம் 6.13 லட்சம் பேர் மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 4 பேர் வேலை செய்து வருகின்றனர். மற்றவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

  பி. விஸ்வநாதன் எம்.பி.: ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ. 148 கூலி வழங்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கிராமங்களில் ரூ. 80, ரூ. 90-க்கு மேல் கூலி வழங்குவதில்லை என்று பயனாளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த வேலைவாய்ப்புத் திட்டம் வறுமையை ஒழிக்கும் உன்னதத் திட்டம் என்பதை மக்களுக்குத் தெரியும்படி பணிபுரியம் இடத்தில் தகவல் பலகை வைத்து அதில் எவ்வளவு கூலி வழங்கப்படும் என்பது குறித்த தகவலை வெளியிட வேண்டும்.

  டி.ஆர். பாலு எம்.பி: இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தில் இதுவரை எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

  திட்ட அலுவலர் அருள்ஜோதி அரசன்: மாவட்டத்தில் 4,374 வீடுகள் கட்ட அனுமதிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 3,502 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன.

  பி.விஸ்வநாதன் எம்.பி: இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 252 பயனாளிகளின் பெயர்களை பரிந்துரைத்துள்ளேன். அவர்களது பெயர் கிராமசபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பிறகும், கடைசி நேரத்தில் பயனாளிகளின் பெயரை அதிகாரிகள் மாற்றிவிடுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது போல தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிóக்கை விடுத்தேன். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

  ஆட்சியர் லி. சித்ரசேனன்: புயல், மழை உள்ளிட்ட காலங்களில் கடற்கரையோர மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை புயல், மழை காலங்களில் மீட்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் சேட்டிலைட் மூலம் மீன்கள் இருக்கும் இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து மீனவர்கள் அதிக அளவில் மீன் பிடிக்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai