சுடச்சுட

    

    செங்கல்பட்டை அடுத்த மேலேரிப்பாக்கத்தில் அமைக்கவிருக்கும் நோய்த் தடுப்பு மருந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலேரிப்பாக்கம் பொதுமக்கள் திங்கள்கிழமை செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் தாலூகாவில் அடங்கிய சோகண்டி, மேலேரிபாக்கம் பகுதியில் உள்ள மேய்க்கால் நிலப்பகுதியில் உள்ளது செங்கல்பட்டு மத்திய தொழுநோய் ஆராய்ச்சி நிறுவனம். அதைச் சுற்றியுள்ள இயற்கைக் காடுகளை அழித்து அப்பகுதியில் ரூ.584 கோடியில் நோய்த் தடுப்பு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க மத்திய அரசால் முடிவு செய்யப்பட்டு மார்ச் மாதம் தொழிற்சாலை கட்டடத்துக்கான பூமிபூஜை செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    அப்போது அப்பகுதி மக்கள் ஆட்சேபணை தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து பூமிபூஜை போடுவது கைவிடப்பட்டது. மேலும் நோய்த் தடுப்பு மருந்து தயாரிப்பதற்காக எச்.பி.எல். நிறுவனத்துக்கு அனுமதி தரப்பட்டது.

    ஆனால் இந்நிறுவனம் எச்.எல்.எல். என்ற பெயரில் நச்சுப்பொருள் ஆலை அமைய இருப்பதாக தெரியவந்த நிலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் நோய்த்தடுப்பு மருந்து தொழிற்சாலை அமையவிருக்கும் அப்பகுதியில் காலாவதியான மாத்திரைகளையும், பொருள்களையும் 2, 3 லாரிகளில் கொண்டு வந்து குழிதோண்டி இரவுடன் இரவாக புதைக்கப்பட்டதாகவும் அதை கண்டறிந்து   வருவாய்துறையினருக்கு தெரிவித்தபோது வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளுக்கு இது குறித்து தகவல் அனுப்பியுள்ளோம்.

    மேலும் இங்கு நச்சு ஆலை செயல்பட்டால் சுற்றுப்புறம் மற்றும் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதுடன் அதன் காரணமாக தங்கள் கால்நடைகளும் இறக்கக் கூடும்.

    மேலும் குழந்தைகளுக்கு நோய்ப் பரவும் அபாயம் உருவாகும் எனக் கூறி மாவட்ட கவுன்சிலர் மீனாட்சி ராமச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் ரதி செüந்தரராஜன், மேலேரிபாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் நளினிபூபதி, துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி சண்முகம், மோசிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயா முனுசாமி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட 2000 பேர் செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆர்டிஓ செல்லப்பா, ஆய்வாளர்கள் மோகன்ராஜ், தங்கவேல், எஸ்.ஐ. சங்கர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai