சுடச்சுட

    

    31-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

    By காஞ்சிபுரம்  |   Published on : 23rd July 2013 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜூலை 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இதில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.

    இந்நிலையில், அன்றைய தினம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ஆடிக் கிருத்திகை விழாவை முன்னிட்டு, வரும் 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதை, ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 10-ம் தேதி 2-வது சனிக்கிழமை, பணி நாளாக

    செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai