சுடச்சுட

    

    அனாதையாக தவித்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீட்பு

    By காஞ்சிபுரம்,  |   Published on : 24th July 2013 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாலாஜாபாத் அருகே அனாதையாக தவித்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீட்கப்பட்டு சென்னை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ஓடந்தாங்கள் கிராமத்தில் புனித அந்தோனியார் சிறுவர் இல்லம் உள்ளது. அதன் அருகே சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை அனாதையாக நின்று அழுது கொண்டிருந்தது. அக்குழந்தை குறித்து அக்கம் பக்கத்தார் விசாரித்ததில் தகவல் ஏதும் தெரியவில்லை. நீண்ட நேரம் ஆகியும் அக்குழந்தையை உரிமை கொண்டாடி யாரும் வரவில்லை. இதைத் தொடர்ந்து இது குறித்து அப்பகுதி மக்கள் வாலாஜாபாத் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அக்குழந்தையை மீட்டு, செங்கல்பட்டு குழந்தைகள் மைய இயக்குநர் தேவஅன்புக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தேவஅன்பு வாலாஜாபாத் காவல் நிலையம் வந்து அக்குழந்தையைப் பெற்றுக் கொண்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அக்குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை நலமுடன் உள்ளதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து அக்குழந்தை சென்னை மணப்பாக்கம் குழந்தைகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் வாலாஜாபாத் போலீஸார் அக்குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai