சுடச்சுட

  

  காஞ்சிபுரம் தலைமை அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் நூதன போராட்டத்தில்  செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

   காஞ்சிபுரம் கோட்ட அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்காரர்கள் மற்றும் எம்டிஎஸ் அஞ்சல் ஊழியர்களின் தேசிய சங்கத்தினர், மேலாடை அணியாமல் டெலிவரி போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஏற்கெனவே முடிவு செய்திருந்தனர்.

  அதன்படி செவ்வாய்க்கிழமை அஞ்சல் ஊழியர்கள் சிலர் மேலாடை அணியாமல் காஞ்சிபுரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு டெலிவரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டச் செயலாளர்கள் ஜெயராஜ், மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

   தபால்காரர் பிரச்னைகள் குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தபால்காரர் பீட்டுகள் விஞ்ஞான முறைப்படியிலான அடிப்படையில் அளவிடப்பட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai