சுடச்சுட

    

    பள்ளிக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் புகார்

    By காஞ்சிபுரம்  |   Published on : 24th July 2013 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளிக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்களிடம் இருந்து இடத்தை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் புகார் மனு அ

    ளித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்துக்கு, தலைமை வகித்த ஆட்சியர் லி. சித்ரசேனன் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களைப் பெற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டம், உமையாள்பரணஞ்சேரி கிராம மக்கள், வளையன்கரணை ஊராட்சித் தலைவர் டி.காசி உள்ளிட்டோர் ஆட்சியரிடம் வழங்கிய மனு: உமையாள்பரணஞ்சேரி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் நிலத்தை, அக்கிராமத்தைச் சேர்ந்த தம்பிரான் மகன்கள் செல்வராஜி, லோகநாதன், பாஸ்கரன், சகாதேவனின் மகன் ராஜாபாதர், கண்ணப்ப நாயக்கரின் மகன் வெங்கடாஜலபதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் வீடுகட்டி உள்ளனர்.

    இதனால் இப்பள்ளிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் பாதியில் நிற்கிறது.  எனவே சம்மந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பள்ளி நிலத்தை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai