சுடச்சுட

    

    சென்னையில் போலி சுங்க அலுவலகம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 114 பவுன் நகை, 3 கார்கள், ரூ. 4 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

     காஞ்சிபுரம் நாராயணபாளையம் தெருவைச் சேர்ந்த முத்து மகன் அன்பரசன் (27). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலி சுங்க அலுவலகம் நடத்தி வந்துள்ளார். இதில் சுங்க அதிகாரிகள் போன்று சிலரை பணியில் அமர்த்தியுள்ளார். அவர்களிடம் தலா ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை வாங்கிக்கொண்டு, போலியாக சுங்க இலாகா முத்திரையுடன் கூடிய பணி சான்றிதழ் வழங்கியுள்ளார். அவர்களுக்கு ரூ. 14 ஆயிரம் வீதம் சம்பளமும் வழங்கினார்களாம். இதற்கு ஈஸ்வர் ராமச்சந்திரன் என்பவர் மூளையாகச் செயல்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

     இந்த நிலையில் கடந்த மாதம் சம்பளம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் விசாரணை செய்ததில் அது போலியான அலுவலகம் என்று தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் தங்களிடம் தலா ரூ. 10 முதல் ரூ. 15 லட்சம் வரை வாங்கி ஏமாற்றியுள்ளதாக அன்பரசன் மீது காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் கடந்த ஜூலை 9-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு புகார் செய்தனர்.

      அதன் பேரில் ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன் மேற்பார்வையில், குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரமேஷ்பாபு தலைமையில், இஸ்பெக்டர் சிகாமணி உள்ளிட்ட போலீஸார் அன்பரசனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அவர் ஜூலை 11-ம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 2 கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு புரோக்கராக செயல்பட்ட மதுராந்தகத்தைச் சேர்ந்த சதீஷை போலீஸார் கைது செய்தனர்.

     இந்த நிலையில் மும்பைக்கு தப்பி ஓடி இருக்கலாம் என்று கருதப்பட்ட ஈஸ்வர் ராமச்சந்திரன், திங்கள்கிழமை காஞ்சிபுரம் விளையாட்டு அரங்கம் பகுதியில் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் போலீஸார் ஈஸ்வர் ராமச்சந்திரனை பிடித்து விசாரித்தனர். விசாரணையைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 114 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ. 4.27 லட்சம், 3 விலை உயர்ந்த கார்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai