சுடச்சுட

  

  பெண் காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில், மேலும் இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
   ÷காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் கலைவாணி (29). இவருக்கு, கனகம்மாசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வக்கீல் குமாஸ்தாவான வெங்கடேசனுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
   கடந்த 2010-ஆம் ஆண்டு, வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்களான முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பன் (42), செஞ்சி அடுத்த, பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் ஓட்டுனர் சுந்தரம் (30) ஆகிய மூவரும், கலைவாணியை, ஆந்திரா மாநிலம், சித்தூர் கிராமத்திற்கு அழைத்துச் சென்று, கொலை செய்து, களத்தூர் அடுத்த, சங்கரன்பாடி பாலாற்றில் ஆற்றில் புதைத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
   ÷கலைவாணியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், ஆற்றில் புதைக்கப்பட்ட கலைவாணியின் உடல் மூன்று ஆண்டுகளுக்கு பின், கடந்த, ஜூலை 17- ம் தேதி அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
   கொலையாளி வெங்கடேசன் கொடுத்த தகவலின் பேரில், அவரது நண்பர் சுப்பன், கார் ஓட்டுனர் சுந்தரம் ஆகியோரை தனிப்படை போலீஸார் சென்னையில் கைது செய்து மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாந்தி முன்பு ஆஜர்படுத்தினர்.
   ÷பாலாற்றில் புதைக்க உடலை கொண்டு செல்ல பயன்படுத்திய காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, சுப்பன், சுந்தரம் ஆகிய இருவரும், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai