சுடச்சுட

    

    மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான  மருத்துவ முகாம்

    By  காஞ்சிபுரம்  |   Published on : 25th July 2013 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு, இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
     ÷காஞ்சிபுரம், டாக்டர் சீனிவாசா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் அன்பரசன் தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
     ÷காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் தலைமையில், ஆறு மருத்துவர்கள் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
     ÷இதில், காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நான்கு வயது முதல், 18 வயதுக்கு உள்பட்ட, 160 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு காது, மூக்கு, தொண்டை, கண் மற்றும் பொது சிகிச்சை ஆகியவை அளிக்கப்பட்டன.
     ÷முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு, தேசிய அடையாள அட்டை மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்க பரிந்துரைக்கப்பட்டன.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai