சுடச்சுட

    

    மாவட்ட வளர்ச்சிப் பணிகள்: அரசுச் செயலர் நேரில் ஆய்வு

    By  காஞ்சிபுரம்  |   Published on : 25th July 2013 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்துவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அரசு செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான இறையன்பு புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.
     காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக அரசு செயலர் இறையன்பு இருந்து வருகிறார். காஞ்சிபுரத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்யும் வகையில் புதன்கிழமை காஞ்சிபுரம் வந்தார். காஞ்சிபுரத்தை அடுத்த திருட்புக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகளிடம் சுகாதாரநிலையத்தில் உள்ள நிறை, குறைகளைக் கேட்டறிந்தார்.
     ÷ தொடர்ந்து, காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் சென்ற இறையன்பு அங்கு, ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தில் நடந்து வரும் பண்ணைக் குட்டைப் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் 100 நாள் வேலைத் திட்டத்தில் உள்ள நிறை, குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.
     பின்னர், களக்காட்டூரை அடுத்த குருவிமலை வாகிரியார் நகரில் நரிக்குறவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள பசுமை வீடுகளைப் பார்வையிட்டு, அங்குள்ள குறைகளையும், அவர்களின் தேவைகளையும் கேட்டறிந்தார்.
     ÷ஐயங்கார்குளம் சென்ற அரசு செயலர் இறையன்பு அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக் கட்டடம் மற்றும் மாணவர்களின் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தினார். இதில் ஆட்சியர் லி. சித்ரசேனன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai