Enable Javscript for better performance
வாக்குச்சாவடி நிலை  அலுவலர்களுக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    வாக்குச்சாவடி நிலை  அலுவலர்களுக்குப் பயிற்சி

    By  ஸ்ரீபெரும்புதூர்  |   Published on : 25th July 2013 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்ட அளவிலான வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
     காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் உத்தரவின்படி, ஸ்ரீபெரும்புதூரில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஸ்ரீபெரும்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
     ÷இப்பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை வரை நடைபெறும். பயிற்சி வகுப்பை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கே. வரலட்சுமி தொடங்கி வைத்தார். இதில் வட்டாட்சியர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செவ்வாய்க்கிழமை நடந்த பயிற்சி வகுப்பில் ஸ்ரீபெரும்புதூர், வல்லம், மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம், தண்டலம் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 100 பேர் பங்கேற்றனர்.
     ÷புதன்கிழமை குன்றத்தூர், மாங்காடு பகுதிகளைச் சேர்ந்த அலுவலர்களும், வியாழக்கிழமை நடைபெற உள்ள பயிற்சி வகுப்பில் படப்பை, செரப்பனஞ்சேரி பகுதிகளைச் சேர்ந்த அலுவலர்களும் பங்கேற்பர்.
     இந்த பயிற்சி வகுப்பில், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை வீடு வீடாகச் சென்று 100 சதவீதம் சரியாக செய்வது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai