சுடச்சுட

    

    உத்தரகண்ட் வெள்ளச்சேதம் சங்கரா பல்கலை. ஆசிரியர்கள் ரூ. 8.45 லட்சம் நிவாரண நிதி

    By காஞ்சிபுரம்  |   Published on : 26th July 2013 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் உத்தரகண்ட் வெள்ளச் சேத நிவாரண நிதியாக ரூ.8.45 லட்சத்தை காஞ்சி பீடாதிபதி சங்கர ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஒப்படைத்தனர்.

     உத்தரகாண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண நிதி திரட்டப்படுவதாக காஞ்சி சங்கரமடம் அறிவித்திருந்தது. அதன்படி காஞ்சிபுரம் சங்கரமடம் சார்பில் உடைகள், உணவுப் பொருள்கள் ஆகியன லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

     மேலும் பல்வேறு தரப்பினரும் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

    இந் நிலையில், காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் ஊழியர் தங்களது ஒருநாள் சம்பளத்தை நிவாரண நிதியாக அளித்தனர். அதன் மூலம் ரூ. 8.45 லட்சம் திரட்டப்பட்டு அதற்கான காசோலையை வியாழக்கிழமை காஞ்சி பீடாதிபதி சங்க ஜயேந்திர சரஸ்வதி சுவாமியிடம், பல்கலைக்கழக பதிவாளர் விஷ்ணுபோத்தி வழங்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai