Enable Javscript for better performance
சாலை மறியல்: 300 அரசு ஊழியர்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

     தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த மறியல் போராட்டத்துக்கு மாநிலச் செயலாளர் அன்பரசு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தங்கராஜ் வரவேற்றார். மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அதிமுக தேர்தல் வாக்குறுதியின் படி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அகவிலைப்படி 80 சதவீதமான நிலையில் 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திட வேண்டும்.

    ஊதியமாற்ற குறை தீர்க்கும் குழு அறிக்கையை உடனடியாக வெளியிட்டு சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி அமுலாக்க வேண்டும். அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதிய முறையில் நிரப்பிட வேண்டும். சாலைப் பணியாளர்கள் பணி நீக்க காலமான 41 மாதத்தை வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

     இதைத் தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே ஊர்வலமாகச் சென்று மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி உள்ளிட்ட போலீஸார், அரசு ஊழியர்கள் 300 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai