சுடச்சுட

    

    சிறுதாவூர் கோயிலில் கடத்தப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் மீட்பு; 8 பேர் கைது

    By காஞ்சிபுரம்  |   Published on : 26th July 2013 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 4 ஐம்பொன்சிலைகளை போலீஸார் மீட்டனர்.

     காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்துள்ள சிறுதாவூரில், சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூதகிரீஸ்வர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அப்பர், பார்வதி, பூதகிரீஸ்வரர், செல்லியம்மன் உள்ளிட்ட 11 ஐம்பொன் சிலைகள் இருந்தன. கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்த 11 ஐம்பொன் சிலைகளும் அருகில் உள்ள பாண்டுரங்கர் பஜனை கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

     இந்நிலையில், அப்பர், செல்லியம்மன், பூதகிரீஸ்வரர், பார்வதி ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் மர்ம நபர்களால் கடந்த ஜூலை 15-ம் தேதி இரவு கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து கோயில் அறங்காவலர் விஜயன் அளித்த புகாரின்பேரில், திருப்போரூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே. இளங்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

     இந்த நிலையில் 4 சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி. விஜயகுமார் கூறியது:

    சிலை திருட்டு குறித்து மாமல்லபுரம் பகுதியில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அங்குள்ள சிலை வாங்கி, விற்கும் கடைக்கு ஒருவர் தொடர்ந்து 2, 3 நாள்களாக சென்று வந்தார். இதைத் தொடர்ந்து அவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் திருப்போரூரைச் சேர்ந்த கார்த்திக் (25) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை செய்ததில் சிறுதாவூர் கோயிலுக்குச் சொந்தமான 4 ஐம்பொன் சிலைகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.

    மேலும் அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (23), தரணி (24), சக்திவேல் (22), சுரேஷ் (21), வினோத் (24), பிரகாஷ் (23), மணிகண்டன் (25) ஆகியோர் சேர்ந்து இந்த சிலை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருப்போரூர் முருகன் கோயில் அருகே ஒரு கிணற்றில் இருந்து அப்பர், பார்வதி, செல்லியம்மன் சிலைகளும், தாமரைக்குளத்தில் இருந்து பூதகிரீஸ்வலர் சிலையும் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 40 லட்சம் இருக்கும். இந்த சிலைகள் இந்து அறநிலையத்துறை அல்லது அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்படும் என்றார்.

    அப்போது ஏ.டி.எஸ்.பி. பாஸ்கரன் மற்றும் விசாரணை அதிகாரிகள், தனிப்படை போலீஸார் இருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai