சுடச்சுட

    

    லாரியில் கடத்தப்பட்ட 90 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

    By காஞ்சிபுரம்  |   Published on : 26th July 2013 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், லாரி மூலம் கடத்திச் செல்லப்பட்ட 90 மூடை ரேஷன் அரிசியை போலீஸார் வியாழக்கிழமை கைப்பற்றினர்.

     காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காஞ்சிபுரத்தை அடுத்த வெள்ளைக்கேட் பகுதியில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. போலீஸ் ரோந்து வாகனத்தை பார்த்ததும், லாரியின் டிரைவர் வேகத்தை அதிகரித்தார். இதனால் சந்தேகமடைந்த ரோந்து பணி போலீஸார், அந்த வாகனத்தை திருட்புக்குழி அருகே விரட்டி மடக்கிப் பிடித்தனர்.

     விசாரணையில் டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே விஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த ராமு (43), கிளீனர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பது தெரியவந்தது.

     மேலும் லாரியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்த போது அது பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு சார்பில் விலையில்லாமல் வழங்கப்படும் அரசு மூட்டைகள் என்றும் அவை சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

     இது குறித்து ரோந்து பணி போலீஸார் அளித்த புகாரில் பாலுச்செட்டி சத்திரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். லாரியில் இருந்து 50 கிலோ எடை கொண்ட 90 மூட்டை (4,500 கிலோ) அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் ராமு, கிளீனர் செல்வக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai