சுடச்சுட

    

    "அம்மா' திட்டம்: 4 மாதங்களில் 70 ஆயிரம் மனுக்களுக்குத் தீர்வு

    By காஞ்சிபுரம்  |   Published on : 27th July 2013 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்மா திட்டத்தின் முலம் கடந்த 4 மாதங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் 70 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    மக்களைத் தேடிச் சென்று அவர்களது குறைகள் குறித்து மனுக்களைப் பெற்று தீர்வு காணும் திட்டமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இத்திட்டம் தமிழகம் முழுவதும் மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து தாலுக்காக்களிலும், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் ஒரு வருவாய் கிராமம் தேர்வு செய்யப்பட்டு அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. கடந்த 4 மாதங்களில் காஞ்சிபுரம் வட்டத்தில் 13 ஆயிரத்து 592 மனுக்கள், உத்தரமேரூரில் 6,597 மனுக்கள், ஸ்ரீபெரும்புதூரில் 36 ஆயிரத்து 32 மனுக்கள், செங்கல்பட்டில் 16 ஆயிரத்து 355 மனுக்கள், திருப்போரூரில் 7 ஆயிரத்து 444 மனுக்கள், திருக்கழுக்குன்றத்தில் 5 ஆயிரத்து 454 மனுக்கள், மதுராந்தகத்தில் 11 ஆயிரத்து 801 மனுக்கள், செய்யூரில் 5 ஆயிரத்து 913 மனுக்கள், தாம்பரத்தில் 3 ஆயிரத்து 190 மனுக்கள், சோழிங்கநல்லூரில் 13 ஆயிரத்து 750 மனுக்கள், ஆலந்தூரில் 9 ஆயிரத்து 762 மனுக்கள் என மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 890 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் குறிப்பாக இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், குடும்பத்தில் முதல் பட்டதாரி சான்றிதழ், இரு பெண் குழந்தைகளுக்கான ஊக்கத் தொகை, வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ், சொத்துரிமை சான்றிதழ் என்பது உள்ளிட்ட 69 ஆயிரத்து 883 மனுக்கள் அன்றைய தினமே தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் லி. சித்ரசேனன் உத்தரவிட்டுள்ளார்.

    திருக்கழுக்குன்றம் வட்டத்தில் உள்ள 109 கிராமங்கள், தாம்பரத்தில் உள்ள 20 கிராமங்கள், சோழிங்கநல்லூரில் 28 கிராமங்கள், ஆலந்தூரில் 23 கிராமங்களில் அம்மா திட்ட முகாம் முழுமையாக நடைபெற்றுவிட்டன. மீதமுள்ள 7 வட்டாட்சியர் அலுவலகப் பகுதிகளில் முகாம்களில் திட்டம் நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் லி. சித்ரசேனன் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai