சுடச்சுட

    

    ஏலச்சீட்டு நடத்தி ரூ. 20 லட்சம் மோசடி: பெண் கைது

    By காஞ்சிபுரம்  |   Published on : 27th July 2013 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏலச்சீட்டு நடத்தி ரூ. 20 லட்சம் மோசடி செய்த பெண்ணை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (39). இவரது மனைவி ராஜலட்சுமி (37).

    இவர் அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். ரூ. 10 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் என மாதச் சீட்டு நடத்தி வந்துள்ளார். சீட்டு கட்டி முடிந்தவர்களுக்கு பணம் கொடுக்காமல் ராஜலட்சுமி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

    இதுகுறித்து, வள்ளலார் நகரைச் சேர்ந்த சுமதி என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் செய்தார். இந்த புகாரைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்டக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து, பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. மூவேந்தன், இன்ஸ்பெக்டர் வரதராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ராஜலட்சுமி ஏலச்சீட்டு நடத்தி ரூ. 20 லட்சம் வரை மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவான ராஜலட்சுமியை சென்னை நெற்குன்றம் பகுதியில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

    பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai