Enable Javscript for better performance
சரணடைந்தவர்களை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    சரணடைந்தவர்களை 3 நாள் காவலில் விசாரிக்க அனுமதி

    By செங்கல்பட்டு,  |   Published on : 27th July 2013 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகரில் கடந்த வாரம் நடந்த அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த 3 பேரையும், 3 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    பி.வி.களத்தூர் சலவையார் தெருவைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் குப்பன். ஜூலை 20-ஆம் தேதி சனிக்கிழமை இரவு பி.வி.களத்தூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்மகும்பல், மறைமலைநகர் பஸ் நிலையம் அருகில் வழிமறித்து குப்பனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.

    இது குறித்து மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்த செங்கல்பட்டு பி.வி. களத்தூரைச் சேர்ந்த சுரேஷ் (37), செங்கல்பட்டை அடுத்த பட்டரைவாக்கத்தைச் சேர்ந்த நித்யானந்தம் (40), காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (40) ஆகிய 3 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.

    அவர்களை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஜே.எம். 2 நீதிபதி காஞ்சனா அனுமதி அளித்தார். 3 நாள் விசாரணைக்கு பிறகு திங்கள்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai