Enable Javscript for better performance
மத்திய வனவியல் நாற்றங்காலில் அமைச்சர்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மத்திய வனவியல் நாற்றங்காலில் அமைச்சர்கள் ஆய்வு

    By ஸ்ரீபெரும்புதூர்,  |   Published on : 27th July 2013 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரசங்கால் பகுதியில் உள்ள சென்னை நகர்ப்புற வனவியல் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய நாற்றங்காலை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா ஆகியோர் அண்மையில் பார்வையிட்டு ஆய்வு

    நடத்தினர்.

    காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கரசங்கால் பகுதியில் சென்னை நகர்ப்புற வனவியல் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் மத்திய நாற்றங்கால் மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்நாற்றங்கால் மையத்தில் இருந்துதான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு, 2013-2014-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டு வரும் மரம் நடும் திட்டத்தின் கீழ் நடவு செய்வதற்கு தேவையான 68,100 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த மரக்கன்றுகள் அனைத்தும் மழைக்காலங்களில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நடவு செய்யப்படவுள்ளன.

    இந்த நாற்றங்கால் மையத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா ஆகியோர் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடததினார்.

    நாற்றங்காலில் உள்ள ஏராளமான மரக்கன்றுகளில் பூச்சிகளால் இலைகள் அரிக்கப்பட்டுள்ளதை பார்த்த அமைச்சர் ஆனந்தன், மரக்கன்றுகளுக்குத் தேவையான உரங்களை இடுமாறு வனத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து கரசங்கால் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைச்சர்கள் ஆனந்தன், சின்னையா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

    இதில் சட்டபேரவை உறுப்பினர்கள் ஸ்ரீபெரும்புதூர் மொளச்சூர் ரா.பெருமாள், உத்தரமேரூர் பா.கணேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியக் குழுத் தலைவர் பழனி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai