தேசிய இளைஞர் விருதுக்கு 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
By காஞ்சிபுரம் | Published on : 28th July 2013 12:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தேசிய இளைஞர் விருதுக்கு வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தங்கநாயகி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 12-ம் தேதி சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய அளவில் இளைஞர் விழா மத்திய அரசால் நடத்தப்படும். அந்த விழாவில் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்துவரும் இளைஞர்களுக்கும், தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கும் தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
2012 ஏப்ரல் 1 முதல் 2013 மார்ச் 31 வரையிலான காலக்கட்டத்துக்கான இளைஞர் நலப் பணியாளர் விருதுகள் பெற குறிப்பிட்ட நிதியாண்டில் 13 வயது முதல் 35 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். தன்னார்வ அடிப்படையில் நிதி ஆதாயம் பெறப்படாமல் தொண்டு செய்திருக்க வேண்டும். இதற்கு முன் விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது. தேர்ந்தெடுக்கப்படும் 25 பேருக்கு ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பரிசும், பதக்கமும் வழங்கப்படும்.
தொண்டு நிறுவனங்களாக இருப்பின் சங்கப்பதிவு சட்டத்தின்படி பதிவு செய்திருக்க வேண்டும். நிர்வாக குழுவின் அதிகாரங்கள் அமைப்பு விதிகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். எந்தவித லாப நோக்கத்துடனும் தொண்டு பணிகள் ஆற்றியிருக்கக் கூடாது. குறிப்பிட்ட ஜாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய, நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. சமுகநலப் பணிகளில் ஈடுபட்டு தொண்டாற்றிய புகைப்படம் மற்றும் செய்திக் குறிப்பு மற்றும் இதர ஆவணங்களுடன் சான்றொப்பம் இட்ட ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும். தேர்வு செய்யப்படும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், பட்டயம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து 3 நகல்களுடன் கருத்துருக்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.