Enable Javscript for better performance
போலி சுங்க அலுவலகம்: மேலும் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் போலி சுங்க அலுவலகம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

    சென்னை மடிப்பாக்கத்தில் போலி சுங்க அலுவலகம் நடத்தி, அதில் வேலை வாங்கித் தருவதாக தலா ரூ. 10 முதல் ரூ. 15 லட்சம் வரை வாங்கியதாக கடந்த ஜூலை 9-ம் தேதி 14 பேர் காஞ்சிபுரம் எஸ்.பி. விஜயகுமாரிடம் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் காஞ்சிபுரம் நாராயணபாளையம் தெருவைச் சேர்ந்த முத்து மகன் அன்பரசனை (27) போலீலார் கடந்த ஜூலை 11-ம் தேதி கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மதுராந்தகத்தைச் சேர்ந்த சதீஷ் அடுத்த சில நாள்களில் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஈஸ்வர் ராமச்சந்திரனை ஜூலை 23-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 114 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ. 4.27 லட்சம், 3 விலை உயர்ந்த கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையில் இந்த வழக்கில் செங்கல்பட்டைச் சேர்ந்த சுரேஷை (34) போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். சுரேஷ் ஏஜெண்டாக செயல்பட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai