சுடச்சுட

  

  மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும்: ஜி.கே.மணி

  By காஞ்சிபுரம்,  |   Published on : 28th July 2013 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பருவ மழை தொடங்கும் முன், மதுராந்தகம் ஏரியை தூர்வார வேண்டும் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வியாழக்கிழமை கூறினார்.

  பசுமை தாயகம் சார்பில் தமிழகம் முழுவதும் மரம் நடுவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மதுராந்தகம் அருகே வேடவாக்கம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மரம் நடும் விழா நடந்தது. பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பொன். கங்காதரன் தலைமை வகித்தார்.

  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி மரக்கன்றுகளை நட்டு வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

  இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரியாக விளங்கும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி அதிக அளவில் தண்ணீர் தேக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் இன்று வரை மதுராந்தகம் ஏரி தூர்வாரப்படவில்லை. வரும் பருவமழை காலத்துக்குள் ஏரியை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன வசதிக்காக முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு திறந்துவிட வேண்டும் என்றார் ஜி.கே. மணி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai