சுடச்சுட

  

  பசுமை தாயகம் சார்பில் சந்தவேலூர், கீரநல்லூர் உள்ளிட்ட அரசு பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய பசுமை தாயகம் சார்பில் சந்தவேலூர், கீரநல்லூர், பொடவூர், இராமனுஜபுரம்,மதுரமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய செயலர் விஜயன் தலைமை தாங்கினார், சந்தவேலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்திபாபு, ஒன்றிய துணை செயலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலாளர் பரந்தூர் சங்கர், மாநில துணைப் பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு   சந்தவேலூர், கீரநல்லூர், பொடவூர், இராமனுஜபுரம், மதுரமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர். இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், பசுமை தாயகம் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai