Enable Javscript for better performance
முஸ்லிம் லீக் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    முஸ்லிம் லீக் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

    By திருவள்ளூர்,  |   Published on : 28th July 2013 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், திருவள்ளூர் ஜே.என்., சாலையில் உள்ள மஸ்ஜித்தே பத்ஹாவில், இப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் காயல் அஹமத் சாலிஹ் தலைமை வகித்தார். செயலாளர் சிக்கந்தர் பாஷா வரவேற்றார். பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகத்தினர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக முஹம்மது யாகூப், மவுலானாக்கள் நவுஷாத், சம்சுதீன், அப்துல்ரஹ்மான் ஆகியோர் நோன்பின் மாண்புகள் குறித்து விளக்க உரையாற்றினர்.

    இதில் முஸ்லீம் லீக் கட்சியின் நிர்வாகிகள் ஜலீல்கான், ஜலால்பாஷா, கரிமுல்லா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மஸ்ஜித்தின் தலைவர் சுலைமான் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai