சுடச்சுட

    

    வங்கியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞர் கைது

    By ஸ்ரீபெரும்புதூர்  |   Published on : 28th July 2013 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீபெரும்புதூர் இந்தியன் வங்கியில் சந்தேகத்துக்கிடமாக நின்றுக் கொண்டிருந்த ஆந்திர மாநில இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஸ்ரீபெரும்புதூர் சன்னதி தெருவில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் அங்கு பணியில் இருந்த ஊழியரை நூதன முறையில் ஏமாற்றி கடந்த 15-ஆம் தேதி ரூ. 10 லட்சத்தை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.

    இதையடுத்து கடந்த 16-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள வங்கி கிளைகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் இந்தியன் வங்கி கிளையில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த ஆந்திர மாநிலம், நகரி பகுதியைச் சேர்ந்த சாமுவேலை (28) போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரை பத்து நாள்களாக காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர். இதையடுத்து அவரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai