சுடச்சுட

    

    வில்லங்கச் சான்று பெறுவதில் காலதாமதம்; இழப்பீட்டுத் தொகை பெறுவதில் அவதி

    By ஸ்ரீபெரும்புதூர்,  |   Published on : 28th July 2013 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பயிற்சிப் பெறாத கணினி ஆபரேட்டர்களால் வில்லங்கச் சான்று பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 62 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நிலம் சம்மந்தப்பட்ட வில்லங்கச் சான்றிதழ், பத்திரப்பதிவு, பத்திர நகல், பிறப்பு-இறப்புச் சான்றிதழ்கள், திருமணப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவைகளை கேட்டு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர்.

    இதுதவிர தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட வல்லம், வடகால் பகுதிகளில் ஒரகடம் சிப்காட்டுக்காக  3000 ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டு உள்ளது,

    இதுதவிர இருங்காட்டுக்கோட்டை சிப்காட் விரிவாக்கத்துக்காக பிள்ளைப்பாக்கம், நாவலூர் ஆகிய கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவு உள்ள இடம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் சிப்காட் கையப்படுத்தப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு சிப்காட் நிர்வாகம் இழப்பீட்டுத் தொகையை வழங்கி வருகிறது.

    இந்த இழப்பீட்டுத் தொகையை நிலங்களின் உரிமையாளர்கள் பெறுவதற்கு நிலங்களின் வில்லங்க சான்றிதழ்யை சிப்காட் நிர்வாக்ததுக்கு பொதுமக்கள் தரவேண்டும். இதனால் வல்லம், வடகால், நாவலூர், பிள்ளைப்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த  பொதுமக்கள் வில்லங்கச் சான்று கேட்டு ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் ஏராளமானோர் மனு அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் வில்லங்கச் சான்று பெறுவதற்கான கட்டணத்தோடு ரூ.100 சேர்த்து வழங்கினால் கணிணி மூலம் வில்லங்க சான்று உடனடியாக வழங்க வேண்டும்.

    ஆனால் சார்பதிவாளர் அலுவலக்தில் பணியாளர்கள் பற்றாக்குறையினாலும், பயிற்சிப் பெறாத கணினி ஆபரேட்டர்களாலும் ஓரிரு நாளில் வழங்கப்பட வேண்டிய வில்லங்கச் சான்றுகள் 3 நாள்கள் முதல் 7 நாள்கள் வரை வழங்ப்படாததால் பொதுமக்கள் இழப்பீட்டு தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்று கேட்டு ஏராளமான பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பயிற்சி பெற்ற கணிணி ஆபரேட்டர்களை பணியில் அமர்த்தும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள

    னர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai