சுடச்சுட

    

    ஸ்ரீபெரும்புதூரில் வெள்ளிக்கிழமை மாலை ராமனுஜர் ஆலய பின்புறமுள்ள வீட்டின் பீரோவை உடைத்து 31 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் எம்ஜிஆர் நகரில் சாலையில் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் 3 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர் சிட்டிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி. இவர் வெள்ளிக்கிழமை மாலை தனது குழந்தையுடன் வீட்டை பூட்டாமல் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 31 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த வித்யா (26), அதே பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீடு நோக்கி சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் வித்யா அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கு தயாராக நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியுள்ளார்.

    இச்சம்பவங்கள் குறித்து பாலாஜி, வித்யா ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கொள்ளையர்களை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்த இரண்டு கொள்ளை சம்பவங்களால் வெள்ளிக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai