சுடச்சுட

    

    வேங்கடமங்கலம் ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    By செங்கல்பட்டு,  |   Published on : 28th July 2013 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடுவாஞ்சேரியை அடுத்த வண்டலூர் வேங்கடமங்கலம் ஏரியை பலர் ஆக்கிரமித்து குடிசைகள் போட்டு வசித்து வந்தனர். அவற்றை வருவாய்த்துறையினர் வியாழக்கிழமை அகற்றினர்.

    வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தில் 90 ஏக்கரில் ஏரி உள்ளது. அதில் 6 ஏக்கரை மடக்கி ஆக்கிரமிப்பு செய்து பலர் குடிசைகள் போட்டு வசித்து வந்தனர்.

    இதையடுத்து ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றித் தருமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு, வேங்கடமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் ரவி, மனு அனுப்பியிருந்தார்.

    இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சித்ரசேனன் ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டு எடுக்குமாறு செங்கல்பட்டு ஆர்டிஓ மற்றும் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய் அதிகாரி சந்தரமூர்த்தி, கிராமநிர்வாக அதிகாரி தனுசு உள்ளிட்டோர் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து குடிசைகள் போட்டிருந்ததை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai