சுடச்சுட

  

  காஞ்சிபுரத்தில் எம்.பி. தொகுதி நிதி ரூ.1.20 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

  By காஞ்சிபுரம்  |   Published on : 29th July 2013 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில், நடப்பு நிதியாண்டில் காஞ்சிபுரத்தில் மட்டும் ரூ. 1.20 கோடி அளவிற்கு நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக விஸ்வநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

   இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து நடப்பு நிதியாண்டில் இதுவரை காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி ஊராட்சியில் நூலகம் கட்டடம் கட்ட ரூ. 5 லட்சம், திருட்புக்குழி காலனியில் ரேஷன் கடைக்கு ரூ. 5 லட்சம், ஆரியபெரும்பாக்கம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க ரூ.5 லட்சம், கோனேரிக்குப்பத்தில் ரூ. 10 லட்சத்தில் தார்சாலை, அவளூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ அறைக்கு ரூ. 7 லட்சம் என்பன உள்பட 12 பணிகளுக்கு ரூ. 65 லட்சத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

   இதே போல் காஞ்சிபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் சின்னகாஞ்சிபுரம் நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட ரூ. 10 லட்சம், பிள்ளையார்பாளையம் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட ரூ. 10 லட்சம், காஞ்சிபுரம் 49-வது வார்டு ஸ்ரீஹரி நகரில் ரூ. 10 லட்சத்தில் சிமென்ட் சாலை என்பன உள்ளிட்ட 9 பணிகளுக்கு ரூ. 55 லட்சத்தில் பணிகள் என மொத்தம் ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai