சுடச்சுட

    

    டி.என்.பி.எஸ்.சி. தொகுதி (குரூப்) 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருகிறது.

     இது குறித்து மாவட்ட ஆட்சியல் லி. சித்ரசேனன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிற்சி வட்டம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள தொகுதி -4 போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

     அப்பயிற்சி வகுப்பு வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை சனி, ஞாயிறு நீங்கலாக மற்ற கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

    காஞ்சிபுரம் மூங்கில்மண்டபம் அருகே உள்ள பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தேர்வர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கலந்து கொண்டு பயனடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai