சுடச்சுட

    

    சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.3,050 ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை

    By காஞ்சிபுரம்,  |   Published on : 29th July 2013 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ. 3,050 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

     ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மாநாடு அண்மையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சிதம்பரம் வரவேற்றார். மாவட்டச் செயலாளற் அமாவாசை ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்டப் பொருளாளர் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாநிலச் செயலாளர் ரத்தினராஜ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

     இதில், அரசாணை 371 மற்றும் 71-ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ரூ. 3,050 ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவச் செலவினை ஈடுகட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையினை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய ரயில் நிலையத்துக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

     இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 பெண் ஓய்வூதியர்கள் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai