சுடச்சுட

    

    காஞ்சிபுரம் மாவட்டம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில்  பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கருத்தரங்குக்கு, அக்கட்சியின் மாவட்ட துணைச்செயலர் கிட்டு தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் சூ.க.விடுதலைச்செழியன் வரவேற்றார்.

    ஒருங்கிணைப்பாளர் வா.கனல்விழி, மாமல்லபுரம் இ.சி.ஆர்.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்ககருத்தரங்கில், புதுச்சேரி பல்கலைக்கழகப் போராசிரியர் ஜெரோம், மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் ஸ்டாலின் ராஜலிங்கம், வே.அலெக்ஸ், வழக்குரைஞர் மீ.ந.பழனிவேல் ஆகியோர் பஞ்சமி நிலம் மீட்பது குறித்து பேசினர்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கோ.தமிழினியன், க.வேலுபிரபாகரன், தயாளன், ஆ.ஆதவன், இ.சாலமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai