சுடச்சுட

  

  மாணவர்களுக்கு வழங்க விலையில்லா சைக்கிள்கள் தயார்

  By காஞ்சிபுரம்  |   Published on : 29th July 2013 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காஞ்சிபுரம் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

   பிளஸ் 1 மாணவர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களின் உதிரிபாகங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒன்றிய அளவில் இடவசதியுள்ள பள்ளிகளில் வந்து இறங்கியுள்ளன.

   இந்த சைக்கிள்களின் உதிரிபாகங்களை பொருத்தும் பணியை மேற்கொள்ள மத்திய பிரதேசத்தில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் 7 பேர் வரை இப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

   இதுகுறித்து அந்த தொழிலாளர்கள் கூறியது: தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக உத்தரபிரதேசத்தில் இருந்து எங்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்துள்ளனர். ஒரு சைக்கிளை உருவாக்கினால் ரூ. 50 முதல் ரூ. 60 வரை கிடைக்கும். நாள் ஒன்றுக்கு ஆளுக்கு 5 முதல் 8 சைக்கிள் வரை உருவாக்க முடியும் என்றனர்

   சைக்கிளின் உறுதித்தன்மையில் சந்தேகம்: காஞ்சிபுரத்தில் உள்ள சைக்கிள் கடைக்கார்கள் சிலர் கூறியது: ஒரு சைக்கிள் இணைத்து உருவாவதற்கு ரூ. 300 வரை வாங்குகிறோம். பள்ளிகளில் வழங்கப்படும் சைக்கிளின் பிட்டிங் (இணைப்பு) மிக மோசமாக உள்ளது. பள்ளிகளில் சைக்கிள் வழங்கியதும், அடுத்த சில நாள்களில் ரீபிட்டிங் செய்தால்தான் சைக்கிளை பயன்படுத்த முடியும். ஏனென்றால் நாங்கள், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2 சைக்கிளுக்கு மேல் பிட்டிங் செய்ய முடியாது. அதே வேளையில் விலையில்லா சைக்கிள்களை பிட்டிங் செய்பவர்கள் நாள் ஒன்றுக்கு 10 சைக்கிள்கள் வரை பிட்டிங் செய்து விடுகின்றனர். எனவே வேலையில் தெளிவு இருப்பது இல்லை என்றனர்.

   மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சைக்கிள்களின் பிட்டிங் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai