சுடச்சுட

    

    மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

    By காஞ்சிபுரம்  |   Published on : 29th July 2013 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒன்றிய அளவில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

     ஆண்டுதோறும் மாற்றுத்திறன் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்த்தல் மற்றும் அவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் அனைவருக்கும் கல்வி இயக்ககம் செய்து வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இப்போது நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் இம்மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.

     இந்நிலையில் இம்முகாம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளமையத்தில் ஜூலை 30-ஆம் தேதி, குன்றத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 31, திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் 6, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கான முகாம் செங்கல்பட்டு சென் கொலம்பஸ் உயர்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் 7, திருக்கழுக்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் 13-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

     புனித தோமையர்மலை (ஊரகம்) ஒன்றியத்துக்கான முகாம் மேடவாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆகஸ்ட் 14, புனித தோமையர்மலை (நகரம்) ஒன்றியத்துக்கான முகாம் பல்லாவரம் நகராட்சித் தொடக்கப்பள்ளியில் ஆகஸ்ட் 16, அச்சிறுப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் 20, மதுராந்தகம் எஸ்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட்  21, லத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பவஞ்சூர் வட்டார வள மைய அலுவலகத்தில் ஆகஸ்ட் 23, சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பொலப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெற உள்ளது.

     காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம்முகாமில் 0 முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளை அழைத்து வரலாம். முகாமுக்கு வரும் போது மாற்றுத் திறனாளி குழந்தைகளின் 4 புகைப்படம், ரேஷன் அட்டையில் நகல் 2 ஆகியனவற்றைக் கொண்டு வர வேண்டும். மருத்துவர்களின் சோதனைக்குப்பிறகு, தேசிய அடையாள அட்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் தேவைப்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கிட தக்க அளவீடு செய்யப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai