சுடச்சுட

    

    உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சார்பில் உலக ரத்த கொடையாளர் தினம் கொண்டாடப்பட்டது. ரத்த தானத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொது மக்களிடையை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் சைக்கிள் பிரசார விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இந்த பேரணி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். பேரணியின் போது ரத்ததானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி, காவலான் கேட், வள்ளல் பச்சையப்பன் தெரு, காமராஜர் சாலை, 4 ராஜவீதி வழியாக சுற்றி வந்து அவரவர் பள்ளிகளுக்குச் சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி. சோமசுந்தரம், காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்து

    கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai